திருச்சியில் நடந்த சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு!
ஜோதிவேல் சிலம்பக்கூடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தமிழர் சிலம்ப கலைத் திருவிழா திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தனித்திறன் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக திருச்சி சிட்டி கமிஷனர் பாலகுமாரன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார். இந்த சிலம்ப போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிலம்ப ஆசான் செந்தில்குமார் கூறுகையில் …
சிலம்பக்கலை என்பது அனைவரும் பாதுகாக்க வேண்டிய ஒன்று, கண்டிப்பாக இந்த கலையை மாணவர்கள் சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், சிலம்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அகாடமி அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என கூறினார்.
Comments are closed.