தமிழக அரசின் வருவாய்த் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வருவாய்த்துறை அலுவலர்கள் கடுமையாக பணியாற்றுகின்றனர்.
வருவாய்த்துறையில் பணியின் தன்மைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் ஏற்படுத்தபடாமல் உள்ள நிலையில்.
ஆன்லைன் மனுக்கள் மீது துரித நடவடுக்கை எடுக்க அதற்கான எந்த வசதியும் இல்லாமல் வருவாய்த்துறையினர் திண்டாடுகின்றனர்.
இரவு, பகலாக உழைக்கும் வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய்த்துறை தலைமையகமாக இருக்கும் சி.ஆர்.ஏ அலுவலகத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கே வருவாய் துறையினரின் கோரிக்கை மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்கள் ஆண்டாண்டு காலமாக நடவடிக்கையில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆகவே தமிழக முதல்வர் வருவாய் துறையினரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.