திருச்சியில் வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் நவீன தோல் மற்றும் முடி சிகிச்சைக்கான மருத்துவமனை திறப்பு விழா!
திருச்சி வேலன் மருத்துவ குழுமத்தின் சார்பில் தோல் மற்றும் தலைமுடி சிறப்பு சிகிச்சைக்கான நவீன மருத்துவமனை, திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தினமலர் ஆசிரியர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த நவீன மருத்துவமனையில் லேசர் சிகிச்சை மூலம் தேவையற்ற முடிகள், முகப்பறு மற்றும் முகத்தில் உள்ள வடுக்கள், பச்சை குறிகளை நீக்கம் செய்து அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மேம்பட்ட அழகுக்கு தோல் மருத்துவ தேவைகள், ரசாயன சிகிச்சைகள், ஸ்டெம் செல் சிகிச்சை, தோல் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற எக்ஸினேநமோ / ஒவ்வாமைக்கும் பலதரப்பட்ட நவீன உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட உள்ளது என இம் மருத்துவமனையின் தோல் மருத்துவம், மற்றும் அழகு சாதன நிபுணர் டாக்டர் K.அகிலா தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் வேலன் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் கண்ணையன், வேலன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜவேல் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.