திருச்சி மாவட்டம், மணப்பாறையில்
அருள் பாலித்து வரும் அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி, பூச்சொறிதல் விழா, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெற்று வருகின்றது.
தினமும் ஒவ்வொரு நாளும் அவர் அவர் சமூகத்தின் சார்பில் மண்டகப்படி வைத்து அம்மன் மின் அலங்காரம் செய்து நகரின் ராஜவீதிகளின் வழியாக பக்தர்களுக்கு கட்சி தந்து அருள் ஆசி பெற்றனர்.
நேற்று ஞாயிற்றுகிழமை முக்கிய நிகழ்வின் ஒன்றான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
இன்று திங்கள் கிழமை காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற அக்னிசட்டி எடுத்தல், அழகு குத்துதல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இரவு எட்டு மணியளவில் வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பரம்பரை நாட்டாண்மை ஆர்.வீ.எஸ்.வீரமணி, சின்ன நாட்டாண்மை மோகன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் காரை மேட்டுப்பட்டி, எடத்தெரு, மணப்பாறை பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் திருக்கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் அம்மன் அம்பு போடும் வேடபரி நிகழ்ச்சிக்காக வேப்பிலை மாரியம்மனை தோழில் சுமந்து மணப்பாறை ராஜவீதிகள் வழியாக பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிக்கப்பட்டனர்.
இந்த வேடபரி விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பராசக்தி, வேப்பிலை மாரியம்மா, என கோஷமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மணப்பாறை காவல்துறையின் சார்பில் காவல்துறை மண்டகப்படியை முன்னிட்டு மதியம் காவல்நிலையத்தில் இருந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுர்ஜித்குமார் தலைமையில், மணப்பாறை காவல் துணை கண்கானிப்பாளர் இராமநாதன், காவல் ஆய்வாளர் கருணாகரன் , மற்றும் காவலர்கள் ஊர்வலமாக சென்று வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மிக பிரமாண்ட அன்னதான விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர்.
வேப்பிலை மாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் இராமநாதன் தலைமையில் , காவல் ஆய்வாளர் கருணாகரன் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.