தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர்கள் முன்னேற்றம் நல சங்கத்தின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
சங்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் நாகலிங்கம் தலைமையில்,சங்க காப்பாளர் ராமானுஜன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் சேக்கிழார் TNEBEF சிறப்புரையாற்றினார், மாநில பொருளாளர் அன்பு குமார், மாநில துணைச்செயலாளர் மாயாண்டி, அன்சாரி பாஷா, ஹரி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் உட்பிரிவாக உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட எலக்ட்ரீசியன்களின் நலனுக்காக தனி நலவாரியம் உருவாக்க வேண்டும்,
தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் சென்னையில் மட்டும் உள்ளது. அதன் கிளை அலுவலகம் தமிழ்நாட்டில் மத்திய பகுதியான திருச்சியில் அமைக்க வேண்டும்,
மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து அமைப்புசாரா எலக்ட்ரீசியன்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,
ஒரே நாடு ஒரே மின் உரிமம் (Electrical Licence) என்ற அடிப்படையில் மின் உரிமத்தை இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், மின் உரிமம் பெற்ற அமைப்பு சாரா மின்பணியாளர்களுக்கு அரசாங்கம் நேரடியாக பணியமர்த்தும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,
H Licence மின் உரிமம் வழங்கும் வாரியத்தால் 3ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடைபெறுகிறது. அதை வருடந்தோறும் நடத்த வேண்டும், வாரிய உறுப்பினர்கள் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தின் நியமனதாரருக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் சேக்கிழார் கூறுகையில்
எலக்ட்ரீசியன்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரி தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் வந்துள்ளது.
கட்டிடம் பணியாளர்களுடன் இணைந்து பயணித்தால் தனி நலவாரியம் அமைக்க முடியாது என்று சொல்லியுள்ளார்கள் இது சம்பந்தமாக தொழிலாளர்கள் துறை அமைச்சரையும் சந்தித்துள்ளோம் இரண்டு தினங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் துறை ஆணையர் சந்தித்து பேசி உள்ளோம் இந்த மாநாட்டில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் சிறப்பு கவனம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்கள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த எலக்ட்ரீசியன் களையும் ஒன்றுதிரட்டி சென்னையில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மாநாட்டில் தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.