தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான முன்வடிவை சட்டமன்றத்தில் வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் பாராட்டு
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான முன்வடிவை சட்டமன்றத்தில் வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் பாராட்டு தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார் அப்போது தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்குவதற்கான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கொண்டு வந்தார். அமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்குவதற்கான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார், மேலும் பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்தை ஆயிரத்தில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்திய தமிழக முதல்வருக்கும் 5 லட்சம் சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர், ஹோமியோபதி, யோகா, இயற்கை முறை மருத்துவர்கள், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். என்று டாக்டர் சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார் அப்போது தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்குவதற்கான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கொண்டு வந்தார். அமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்குவதற்கான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார், மேலும் பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்தை ஆயிரத்தில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்திய தமிழக முதல்வருக்கும் 5 லட்சம் சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர், ஹோமியோபதி, யோகா, இயற்கை முறை மருத்துவர்கள், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
என்று டாக்டர் சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார்.