திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் ஆண்டுதோறும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மோர் பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் அந்த வகையில்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில்
திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் மாநகரம் பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முதலாம் ஆண்டு தண்ணீர் பந்தல் அமைத்து தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த முறையில் தயாரித்து நீர் மோர் பானங்கள் வழங்கினார்.
தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், செயளாலர் ராஜலிங்கம், பொருளார் சங்கர் முன்னிலையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞங்கரணி செயலாளர் மாரிமுத்து துணைத் தலைவரும் ஆலோசகர்ரும்மான சுரேஷ், பிரபாகரன், ஜீவரத்தினம், ரகுராமன், மனோகர், மோகன்ராஜ் , ரமேஷ் மற்றும் மகளிர் அணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.