‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் – கலகலப்பான காதல் இளைஞர்கள் உற்சாகம்

0

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் – கலகலப்பான காதல் இளைஞர்கள் உற்சாகம்‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். இவர் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது.  படத்தில் பகல் நேரத்தில் கார் டிரைவராகவம் இரவு நேரத்தில் பவுன்சராகவும் வேலை செய்து வருகிறார்.

அப்படி டிரைவராக வேலை செய்யும் போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும் போது சமந்தாவையும் என இருவரையும் காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இவர் காதல் பிரச்சனையாக மாறுகிறது.
படத்தின் இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார். நயன்தாரா, சமந்தா இருவரையும் காதலித்த நிலையில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார் என்பது படத்தில் மீதி உள்ள கதை

- Advertisement -

ஹீரோ விஜய் சேதுபதி தனது இயல்பான நடிப்புத் திறனைக் கொண்டு, ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிகம் ரசிக்கும் வண்ணம் அவரது நடிப்பு உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். புஷ்பா படத்திற்குப் பிறகு கிளாமரில் கவனம் செலுத்தி வரும் சமந்தா இந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூன்று பேருமே போட்டி போட்டு நடித்துள்ளது மிகவும் அருமை, மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் களமிறங்கி கலக்கி இருக்கிறார்கள்.

ஒருவர் இரண்டு பெண்களை காதலிக்கும், காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நடிகர்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படத்தில் காமெடி காட்சிகள் வெகுவாக கை கொடுத்துள்ளது. இரண்டு காதலை மையமாக கொண்டு ரசிகர்கள் அனைவரையும் நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்

படத்தில் அனிருத்தின் இசை பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும் குறிப்பாக பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் மனதில் உள்ளது ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் மொத்தத்தில் கலகலப்பான காதல். இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்