திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,
தொழிற்சங்க சட்டங்களின்படி 480 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணி புரிபவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்,
21.02.2022 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் பொது மேலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதியளித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,
19 ஆண்டுகளாக தொகுப்பூதியம் பெற்று வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
ABC பணி சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும்,
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல்களில் வெளிப்படையான முறைகளை கடைபிடிக்க வேண்டும், டாஸ்மாக்கில் மதுபானங்களை வழங்குவதற்கு பண பரிவர்த்தனையை POS முறையை அமல்படுத்த வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் பணி நிரவலை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மது கூடங்களுக்கும் தொடர்பில்லாத வகையில் புதிய முறையை அமல்படுத்த வேண்டும்,
விற்பனைத் தொகையினை நேரடியாக வசூல் செய்ய சென்னையில் உள்ள நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டுமென 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், மாநிலத் தலைவர் சரவணன், மாநில செயலாளர்கள் முருகானந்தம், பழனிபாரதி,
மாநில பொதுச்செயலாளர் கோதண்டம், மாநில இணைப் பொதுச் செயலாளர் முத்துக்குமரன், மாநில பொருளாளர் கணேசன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பிச்சைமுத்து, முன்னாள் பொதுச் செயலாளர் கணேசன், திருச்சி மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் திரளாக கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.