நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் 50% கட்டண சலுகை கலைஞர்கள் உற்சாகம்
நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கு 50% கட்டண சலுகை தமிழ்நாடு அரசு ஆணையின்படி, அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடக மற்றும் கிராமிய கலைஞர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்து கழகத்தின் மாவட்ட அலுவலகத்திற்கு சென்று கலைஞர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கான அடையாள அட்டையை வழங்கி பயணம் செய்வதற்கான விண்ணப்பத்தை பெற்று கொள்ளவும். அந்த வகையில்
மன்னார்குடி இயல், இசை, நாடக நடிகர் சங்க செயலாளரர்
C.ஜோதி மகாலிங்கம் தலைமையில் NN.விவேக், P.வீரபாண்டியன் ஆகியோர் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகம் மண்டல மேலாளர் அலுவலர் ராஜா அவர்களிடம் கலைஞர்களுக்கு என மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட உரிய அடையாள அட்டையை வழங்கி சங்கத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு இதுபோன்ற சலுகைகளை வழங்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, இதுபோன்று கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்து செயல்படும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து பன்முக கலைஞர்களின் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.