திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள கரியமாணிக்கம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிடப்பட்டது. இந்நிலையில் தொடர் மழையால் மக்காச்சோள பயில்களில் அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்கம் ஏற்பட்டு மக்காச்சோள பயிர்கள் மிகவும் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நோய் தாக்கம் ஏற்பட்ட மக்காச்சோளப் பயிர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் ஏக்கருக்கு 50,000 நஷ்ட ஈடு கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி கரியமாணிக்கம் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளோம். மேலும் 4, 5 முறை பூச்சி மருந்து அடித்தும் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தது. இந்த மக்காச்சோள பயிர்களுக்காக 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ளோம். இதனால் மாவட்ட ஆட்சித் ஆட்சியர், ஏக்கருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed.