திருச்சி இடமலை பட்டியில் உள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
உதவி ஆசிரியர் சாந்தி வரவேற்பு உரை ஆற்றினார், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜே.கே.சி அறக்கட்டளை கௌரவ தலைவர் பேராசிரியர் ரவிசேகர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், ஜே.கே.சி அறக்கட்டளை
நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்,
மேலும் வகுப்பு வாரியாக நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி ,கட்டுரை போட்டி, பாட்டு போட்டி மற்றும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுடன் இணைந்து பரிசுகளை வழங்கினர். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகளுடன் எழுதுகோல் வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் ஆரோக்கிய மேரி, சிறிய புஷ்பம் நன்றி உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள்,ஜே.கே.சி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.