புஷ்பா’ திரைப்பட பாணியில் 12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி

0

‘புஷ்பா’ சினிமா பாணியில் தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி செய்த இரண்டு நபரை காவல்துறையினர் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை

தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி வந்தனர். அப்போது சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தும் போது,

- Advertisement -

மலேசியாவுக்கு அனுப்புவதற்காக 9 மரப்பெட்டிகளில் இரும்பு குழாய்கள் வைத்து மூடப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். அந்த பெட்டிகளின் மொத்த எடை 12 டன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக திறந்து பார்த்துள்ளனர். அப்போது இரும்பு குழாய்களின் கீழ் பலகை வைத்து மறைத்து இரும்பு குழாய்கள் போல கருப்பு பாலித்தீன் பேப்பர்களில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

‘புஷ்பா’ சினிமா பாணியில் செம்மரக்கட்டைகளை நூதன முறையில் கடத்துவதற்காக இவை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் விசாரணையில்,

திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் இந்த இரும்பு குழாய் பெட்டிகளை மலேசியா அனுப்புவதற்காக பதிவு செய்தது அதிகாரிகள் விசாரணையில்தெரிய வந்துள்ளது.

செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக அவரையும், செம்மரக்கட்டைகளை ஏற்றி வந்த மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்