திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்
16 மற்றும் 17 பிப்ரவரி2023 ஆகிய தேதிகளில் வணிகவியல் துறை சார்பாக “வர்த்தக உலகில் சக்தி வாய்ந்த நான்கு பகுதிகள்” என்றத் தலைப்பபில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தயாபரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
கல்லூரியின் நிதியாளர் முனைவர் ஞானராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு தேசிய சட்டக் கல்லூரியின் துணை வேந்தர் முனைவர் V.S.எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வர்த்தக உலகின் மாபெரும் முன்னேற்றத்தையும், நான்கு பகுதிகளும் எதிர்காலத்தில் திறம்பட செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் குறித்து சொற்பொழிவாற்றினார்.
இக்கருத்தரங்கிற்கு சென்னையின் பீட்டா மங் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் Dr.செந்தாமரை கோகுலகிருஷ்ணன் மற்றும் சுல்தானேட் ஓமன் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் எல்பர்ட் பிரையன் ஆகியோரும் இக்கருத்தரங்கின் முதல் நாள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
வணிகவியல் துறை பேராசிரியர் Dr. ஹேனா நன்றியுரை வாசித்தார்.
இந்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கில் சுமார் 512 பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் அனைத்து செயல்பாடுகளையும் Dr.சாந்தி மெர்லின் ஒருங்கிணைத்தார்.