தேநீர் விருந்து புறக்கணிப்பு : ஸ்டாலின் விளக்கம் அளித்தது ஏன்?

0

Advertisement

தேநீர் விருந்து புறக்கணிப்பு : ஸ்டாலின் விளக்கம் அளித்தது ஏன்?

6Shares

twitter sharing button
telegram sharing button

 15+60

- Advertisement -

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone00:0002:14

தமிழ்ப் புத்தாண்டு நாளில் கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன் என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் 110 விதியின் கீழ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து, கோட்டை வட்டாரங்கள் கூறியதாவது: கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டாலும், அதை நடத்த வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு தான் உள்ளது. மாநில பொதுத்துறை தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பது குறித்த ஒப்புதலை, முறையாக பெற்றது கவர்னர் அலுவலகம். அதன் பின்பே, முதல்வர் பெயர் குறிப்பிடப்பட்டு, அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது; முதல்வருக்கு அழைப்பிதழும் அனுப்பப்பட்டது.

இப்பணிகளை, கவர்னர் அலுவலக பரிந்துரை மற்றும் மேற்பார்வையில் செய்தது, தமிழக அரசின் பொதுத்துறை தான். அரசியல் சட்டப்படி, கவர்னர் என்பவர், மாநில அரசின் செயல் தலைவர். மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கவர்னருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, அரசை நடத்த உதவுவது கடமை. அது குறித்து கவர்னருக்கு விளக்கம் கூற வேண்டும். அதை ஏற்று நடப்பதும், நடக்காததும் கவர்னரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. கவர்னர் தன் விருப்புரிமை அடிப்படையில், மாநில நலனுக்காக எடுக்கும் எந்த முடிவையும், யாரும் கேள்வி கேட்க முடியாது.

latest tamil news

அதேபோல, அரசின் எந்த உத்தரவானாலும், செயல்பாடுகள் என்றாலும், அவற்றை கவர்னர் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தி.மு.க., தலைவராக ஸ்டாலின், தேநீர் விருந்தை புறக்கணித்தால், அதைத் தவறு என சொல்ல முடியாது. ஒரு முதல்வராக அவர் புறக்கணித்தது தவறு; அதுவும் ஒட்டுமொத்த அரசையும் புறக்கணிக்க வைத்தது ரொம்ப தவறு. முதல்வர் உத்தரவு என்பதால், தலைமை செயலர், டி.ஜி.பி., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவருமே, கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்து விட்டனர்.

எனவே, தமிழக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கவர்னர் ரவி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப யோசித்து வருவதாக தெரிகிறது. இந்த விஷயங்களை அறிந்ததும்தான், முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் 110 விதியின் கீழ் விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இவ்வாறு கோட்டை வட்டாரங்கள் கூறின.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்