திருச்சி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

0

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் 1 மாத காலமாக 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலர் அவதியுற்றனர்.

- Advertisement -


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்