தளபதி 66 படத்தில் விஜய்யின் அண்ணனாக நடிக்கும் நடிகர் ஷாம்
‘தளபதி 66’ படத்தில் பிரபல நடிகர் ஷாம் விஜய்யின் அண்ணனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடித்துவருகிறார். பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் தளபதி 66 படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் விஜய்யுடன் நாயகி ராஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் வரைலானது. தற்போது இந்தப் படத்தின் பாடல் படமாக்கப்பட்டது.
இதனையடுத்து ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றின் செட் உருவாக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.