இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் திருமணம்

0

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், நடிகர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கினார் அப்போது நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 
சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்.


நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணத்திற்காக திருமண மண்டபத்தை இன்று முன்பதிவு செய்துள்ளார்கள். 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்